குற்றவாளியின் மனைவியுடன் சுற்றிய அமலாக்கத் துறை அதிகாரி... ஹோட்டலில் ரூம் போட்டது அம்பலம்!

admin

Editorial Team

மேற்குவங்கத்தில் ரோஸ்வேலி நிதிநிறுவன மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளியின் மனைவியுடன் அமலாக்கத்துறை அதிகாரி சுற்றியது அம்பலமாகியுள்ளது.அவர்கள் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ள

மேற்குவங்கத்தில் ரோஸ்வேலி நிதிநிறுவன மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளி ஒருவரின் மனைவியுடன் விசாரணை அதிகாரி நெருக்கமாக இருந்தது அம்பலாமாகியுள்ளது. அவர்கள் ஹோட்டலில் தனியரை எடுத்து தங்கியதற்கான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளதால் மேற்குவங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கை அமலாக்கத்துறை துணை இயக்குநரான மனோஜ் குமார் என்பவர் விசாரித்து வருகிறார். இவர், மோசடி வழக்கில் சிக்கிய ரோஸ்வேலி சிட்பண்ட் நிறுவனத்தின் தலைவர் கவுதம் குண்டுவின் மனைவி சுப்ராவுடன் நெருக்கமாக இருந்ததாக புகார் எழுந்தது.

இவர் கடந்த மாதம் சுப்ராவுடன் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றுள்ளார். பின்னர் டெல்லி சுந்தர் நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனி அறை எடுத்து சுப்ராவுடன் தங்கியுள்ளார். இந்தக் காட்சிகள் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

என்ன தொடர்பு
இதனை சில டிவி சேனல்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளன. குற்றாவளியின் மனைவியுடன் விசாரணை அதிகாரக்கு என்ன தொடர்பு என்றும் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

அமலாக்கத்துறை அதிகாரி சஸ்பெண்ட்
இந்த விஷயம் பூதாகரமாகியுள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை
அவர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்திவு செய்துள்ள போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி மனோஜ்குமார் மற்றும் கவுதம் குண்டுவின் மனைவி சுப்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெறும் நட்பு மட்டும் தான்
இதில் சில நாட்களாகத்தான் தங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என அமலாக்கத்துறை அதிகாரி மனோஜ்குமார் தெரிவித்துள்ளார். தங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

நட்பு வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தாது
சுப்ரா தனக்கு ஒரு நல்ல தோழி என்றும் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார். தங்களின் நட்பு ரோஸ்வேலி மோசடி வழக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வழிகாட்டியாக செயல்பட்டாரா?

அதிகாரி மனோஜ்குமார் மோசடி வழக்கில் இருந்து வெளிவருவது தொடர்பாக கவுதம் குண்டுவையும் அவரது மனைவியையும் வழி நடத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பின் கொல்கத்தாவில் 3 ஹவாலா ஆப்ரேட்டர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1.42 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேடம் ரோஸ்வேலி
அவர்களின கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்த ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் ரோஸ்வேலி மற்றும் மேடம் ரோஸ்வேலி என இருந்த இரண்ட பைல்களை கைப்பற்றியுள்ளனர். ரோஸ்வேலி நிதிநிறுவனம் மேற்குவங்கத்தில் 17000 கோடி ரூபாய் மோசடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்