தமிழக தரப்பு வழக்கறிஞர்களின் அசத்தல் வாதம்!

admin

Editorial Team

ஜல்லிகட்டு வழக்கு தொடர்பாக தமிழக அரசின் வழக்கறிஞர்கள் பராசுரன் தலைமையில் சிறப்பாக வாதாடினர்.  வழக்கறிஞர்கள் எழுப்பிய சரமாரி கேள்விகளும், அதிரடி பதில்களும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வியப்பில் ஆழ்த்தின. அதன் சுருக்கம்.

நீதிமன்றம்: 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு                                           மதிக்கப்படாததன் மூலம் வன்முறை நிகழ்ந்துள்ளது.

தமிழக அரசு வழக்கறிஞர்: போராட்டம் அமைதியாகவே நடைபெற்றது. ஜல்லிகட்டு நடத்த வேண்டிய புதிய சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதை வெளிக்காட்டிய எழுச்சி அது. மக்கள் போராட்டம் நடத்து அவர்களின் அடிப்படை உரிமை இல்லையா?

நீதிமன்றம் : போராட்டம் அமைதியாக நடைபெற்றதாக நீங்கள் கூறினாலும் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத செயல்.

வழக்கறிஞர்: போராட்டம் முழுவதுமாக அமைதியாகவே நடைபெற்றது. சில சம்பவங்கள் திடீரென நடைபெற்றன.

நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் தான் இறுதியான மத்தியஸ்தர். அதன் தீர்ப்புகளுக்கு இணக்கமாகவும், கீழ்படியவும் வேண்டும்.

வழக்கறிஞர்: 2014 ஆம் ஆண்டு ஜல்லிகட்டிற்கு தடை போட்ட நீதிபதி நாகராஜனின் தீர்ப்பு மீறப்படவில்லை. ஜனவரி 23 ஆம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் போட்டதற்கு பிறகு தான் ஜல்லிகட்டு நடந்தது.  போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இல்லையா? சட்டத்தை மாற்ற வேண்டும் என மக்கள் கூறினர். சட்டம் இயற்றுபவர்களின் காதுகளில் அது விழவில்லை.

நீதிமன்றம் : உச்சநீதிமன்றத்தின் மான்பை காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கவலை.  ஜல்லிகட்டில் எப்படி 4 பேர் உயிரிழந்தனர்.

வழக்கறிஞர்: கிரிக்கெட் விளையாட்டிலும் தான் வீரர்கள் இறக்கின்றனர். டெல்லியில் ஒரு கிரிக்கெட் வீரர் உயிரிழந்தார். அதற்காக நாம் கிரிக்கெட்டை தடை செய்ய முடியுமா?

திடீரென குறுக்கிட்ட சுப்ரமணிய சாமி: தமிழக அரசு வன்முறை இல்லை என மனுத்தாக்கல் செய்திருப்பது பொய்யானது. வன்முறை இல்லை என்று சொல்வது தவறு. புதுக்கோட்டையில் ஒரு காவல்நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. ஜல்லிகட்டு நிகழ்ச்சி உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலேயே நடைபெற்றன.

நீதிமன்றம் : ஆம். அதைத் தான் நாங்களும் சொல்கிறோம்.

இவ்வாறு வாதம் நடைபெற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்