என்னை கட்சியிலிருந்து நீக்க யாருக்கும் உரிமை இல்லை: சசிகலாவை எதிர்த்து பேசிய ஒ.பி.எஸ்

admin

Editorial Team

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு 45 நிமிடங்களுக்கு மேலாக ஆழ்ந்த மௌனத்தில் அமர்ந்துள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை. அஞ்சலி செலுத்தியுள்ளார்..

பின்பு, செய்தியாளர்களை சந்தித்த இவர், கட்சியில் நிகழ்ந்த உட்பூசல்கள் குறித்து பல உண்மைகளை தெரிவித்துள்ளார்

 

இதையடுத்து, கட்சிக்கு புறம்பாக பேட்டியளித்த பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கையாக அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் அவரை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளார்..

பின்பு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்போவதாக தெரிவித்துள்ளார். .

இந்நிலையில், இது குறித்து பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, என்னை கட்சியின் பொருளாளர் பதவியில் நியமித்தது மான்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் தான்...அதனால் என்னை அப்பதவியில் இருந்து நீக்க எவருக்கும் உரிமை இல்லை என்று சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார்..

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்