இறுதி நாட்களில் ஜெயலலிதா சொன்னது இதுதான்! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

admin

Editorial Team

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்திருந்த முதலமைச்சர் பன்னீர் செல்வம் கண்ணீரோடு மெளனம் கலைத்துள்ளார்.

சென்னை மெரினாவில் கூடிய பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ''நான் செய்த பணிகள் அனைத்தும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது'' என்று சசிகலா மற்றும் குடும்பத்தினர் மீது முதல்வர் பன்னீர் செல்வம் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, கழகத்தின் அவைத் தலைவராக மதுசூதனன் இருக்க வேண்டும் என்றும் என்னை முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறினார். அம்மா உயிருடன் இருக்கும் பொது என்னை முதல்வராக இருக்க சொன்னார்கள். நான் அதை ஏற்றுக் கொண்டு இருந்தேன்.

சின்னமாவை பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று பாஸ்கர் என்னிடம் கூறினார். நான் சின்னம்மாவிடம் அந்தக் கருத்தை சொன்னேன். பொதுக்குழுவில் என்னை தேர்ந்தெடுக்கப்பட்ட பணியை நான் ஏற்று கொஞ்சமும் பிசகாமல் செய்தேன்.

மனசாட்சி உறுத்தியதால் அம்மாவின் நினைவிடத்திற்கு வந்தேன். முதலமைச்சராக நான் பதவியேற்றபோது என்னை விஜயபாஸ்கர் வந்து பார்த்தார்.

நான் முதல்வராக இருக்கும்போதே சசிகலா முதல்வராக வர வேண்டும் என்று தம்பிதுரை கூறினார். தம்பிதுரையால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதிமுகவின் நிலையைக் கண்டு தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்