அப்துல் மஜித் என்ற மாணவன் படுகொலை சம்பவமும் சமூகத்திற்கு தரும் படிப்பினையும் !!!

admin

Editorial Team

கும்பகோணத்தில் 11 ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அப்துல் மஜித்
இரண்டு நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் குற்றவாளிகளான இரண்டு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில்......

கொலையாளியான சண்முக சந்திரன் என்பவன் அவனது அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளான். அந்த பெண்ணுடன் மாணவன் அப்துல் மஜித்க்கு திடீர் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் தனது கள்ள காதலனான சண்முக சந்திரனிடம் பழகுவதை குறைத்துக்கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த சண்முக சந்திரன் தனது கூட்டாளி சின்ன அப்பு என்ற ராம மூர்த்தியுடன் இணைந்து கொலைசெய்துள்ளனர்.

மாணவன் அப்துல் மஜித் தனது தம்பியை அழைப்பதற்காக தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் மாணவன் அப்துல் மர்ஜுக் தொலைபேசியில் பேசியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.

இந்த சம்பவத்தில் மூன்று முக்கிய விஷயங்கள் கவனிக்க தக்கது.

ஒன்று செல்போன் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு செல்போன் தேவையா? அப்படியே கொடுத்திருந்தாலும் பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? யாருடன் பழகுகிறார் என்ன மாதிரியான நட்பு என்றெல்லாம் பெற்றோர்கள் கவனித்து தடுத்திருந்தால் உயிர் பறி போயிருக்குமா? தொலைபேசி இருந்ததால் தானே அந்நிய பெண்ணுடன் இலகுவாக பழக முடிகிறது. பேசமுடிகிறது.

இரண்டாவது இரண்டு சக்கர வாகனம் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இரண்டு சக்கர வாகனம் அவசியமா? அப்படியே பள்ளி செல்வதற்காக அவசியம் என்றால் அது பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டாமா?

மூன்றாவது பெற்றோர்களின் தவற விட்ட கண்டிப்பு...

இந்த மூன்று விஷயங்களும் மாணவன் அப்துல் மஜித் உயிரை பலிகொடுத்துவிட்டது.

இதுதான் இன்றைய மாணவர்களை பெற்றோர்கள் பராமரிக்கும் லட்சணம்..!! மிக மிக சிறிய வயதிலேயே மொபைல் போனும், இரண்டு சக்கர வாகனமும் வாங்கி கொடுத்துவிடும் பெற்றோர்கள் அன்றாட தேவைக்கும் கை நிறைய காசு கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் அதெல்லாம் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா? தனது பிள்ளைகள் முறையாக வளர்கின்றார்களா? அவர்களின் நண்பர்கள் வட்டம் எப்படியாக உள்ளது? என்றெல்லாம் விசாரிக்காத அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் காரணத்தால்தான் இன்றைக்கு இளைய சமுதாயம் வழிகேட்டு நிற்கிறது.

அதில் சில இப்படியான சம்பவங்களாக மாறி உயிரை பலி வாங்கிவிடுகிறது. அதிகமாக இரண்டு சக்கரவாகனத்தின் மூலம் விபத்துகளும் அரங்கேறுகின்றன என்பதையும் பெற்றோர்கள் உணர்ந்து. வயது வரம்பை எட்டியவர்களுக்கு பராமரிப்புடன் இதுபோன்ற விஷயங்களை அனுமதிக்க வேண்டும். ஒரு சம்பவத்திலிருந்து படிப்பினையை கற்றுக்கொள்ள வேண்டும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்