சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

admin

Editorial Team

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியது அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா, முதல்வர் பதவியை கைப்பற்ற ஆவலுடன் காத்துக் கிடக்கிறார். இதனால் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தில் இருக்கிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலினை விமர்சித்து சசிகலாவின் பெயரில் கையெழுத்திடாத அறிக்கை ஒன்று நேற்று வெளியானது.

அதே நேரத்தில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

அப்போது புன்னகை பூத்த முகமாக ஸ்டாலினுடன் பேசிக் கொண்டிருந்த பன்னீர் செல்வர், திமுக செயல் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இந்த தகவல் உடனே போயஸ் கார்டனுக்கு செல்ல, இதை கேட்ட மன்னார்குடி கோஷ்டி மிகவும் அப்செட் ஆகி போயுள்ளனராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்