ஓ.பி.எஸ் இன்று சில நிமிடங்களுக்கு முன் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். - தமிழச்சி பரபரப்பு

admin

Editorial Team

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அப்போலோவில் 75 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டு இறந்த தகவலை அறிவித்த அடுத்த சில மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டு முதல்வராக பெறுப்பேற்றுக் கொண்ட ஓ.பி.எஸ் இன்று சில நிமிடங்களுக்கு முன் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சசிகலாவுடனான சந்திப்பிற்கு பின் இந்நிகழ்வு நடந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சாகடித்து 'இந்நாள் முதல்வர்' என்ற பெருமையைக்கூட தர மனம் வராத சசிகலாவின் மாபீயா கூட்டம் முன்னாள் 'தமிழக முதல்வர்' என்ற அடையாளத்துடன் இறுதி சடங்குகளை நடத்தியதோடு ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் அனுபவிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டது.

இந்த  சசிகலாவின்_மாபீயா_கூட்டம் இனியும் தமிழ்நாட்டுக்குள் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவள் போடும் எலும்புத் துண்டுகளுக்கு அலையும் ஈனப்பிழைப்புவாதிகளாக மட்டுமே இருக்க முடியும்.

ஓ.பி.எஸ் இராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் தமிழ்நாட்டு முதல்வர் நாற்காலியை பிடித்து விடலாம் என கனவு காணும் சூத்திரதாரி சசிகலாவை அரசியலில் இருந்து விரட்ட வேண்டுமானால் இனி தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அரசியலில் பதவிக்கு வந்த பிறகு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருப்பீர்கள். இந்த சசிகலாவோ அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஏராளமான சொத்துக்களுக்கு 'பினாமி ராணி'யாக திரிபவர் என்பதை தமிழர்கள் மறந்து விடக்கூடாது.
#தமிழச்சி
02/01/2017
 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்