கவர்மென்ட் நடத்தறீங்களா.. கசாப்பு கடை நடத்தறீங்களா..! சசி மீது மோடி பாய்ச்சல்..!!

admin

Editorial Team

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகும் போயஸ் கார்டனில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை கண்டித்து ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தார். அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சசிகலா பொதுச்செயலாளர் ஆனதற்கு, மத்திய அரசுடனான சமரச போக்கே காரணம் என்றும், பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் கட்சி பொறுப்பேற்ற சசிகலா, முதல்வராகவும் நியமிக்கப்படுவார் என்றும் தெரிய வருகிறது.


இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாகவும், பன்னீருக்கு எதிராகவும் தம்பிதுரையின் செயல்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கட்சியில் அனைத்து நிலைகளிலும் தன்னை பிரதானப்படுத்தியே விளம்பரங்கள், பேனர்கள் போன்றவைகள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கிடையில் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்னரே தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் சசிகலாவிற்கு முக்கியத்துவம் அளித்து, அவர் புகழ்பாடுவது பொதுமக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.


சசிகலாவின் இந்த அதிரடி அரசியல் அனைத்தும் உளவுத்துறையினரால் அறிந்த கண்காணிக்கப்பட்டு டெல்லிக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் மோடியின் அதிரடி தொடரலாம் என்றும், தமிழக அரசு மீது எந்நேரமும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்