கண்ணீருடன் விடை பெறுகிறார் பன்னீா் டீ கடையை நோக்கி..! மகிழ்ச்சியில் தம்பிதுரை..!!

admin

Editorial Team

தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்தபின்பு சசிகலா இடைக்கால முதல்வராக தன்னுடைய தீவிர விசுவாசி எடப்பாடி பழனிச்சாமிதான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால், மத்திய அரசு பன்னீா்செல்வம் முதல்வராக வந்தால் அடாவடி இருக்காது என்று நினைத்தது.

இதுதான் சசிகலாவின் முதல் தோல்வி. இதுதான்  கடைசி தோல்வியும் கூட. மத்திய அரசு தான் முதல்வராக நீடிக்க உதவியாக இருக்கும் என்று பன்னீர் நம்பிக்கையுடன் இருந்தார்.

டெல்லிக்கு சென்ற பன்னீா் அதிமுகவின் பிரதிநிதி துணை சபாநாயகா் தம்பிதுரை இல்லாமல் 10 நிமிடம் தனியாக பிரதமரிடம் பேசியுள்ளார்.

இதன் விளைவாக தமிழகத்தில் அதிரடி ரெய்டு நடந்தது. அது  போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா ரூம் வரை சென்றது.

அடுத்து சசிகலாதான் என்று அனைவரும் நினைத்து காத்து இருக்க, தம்பிதுரையின் திறமையால் மத்திய அரசு பணிந்தது.

தன்னை மதிக்காத பன்னீா் செல்வத்தை இனியும் முதல்வராக நீடிக்க  வைக்க கூடாது என்ற முடிவில் தம்பிதுரையின் செயல்பாடுகள் அமைந்தன.

இன்று ஆட்சி தலைமையும், கட்சி தலைமையும் ஒருவரிடத்தில் இருந்தால்தான் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லது. ஆகவே, முதல்வராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் என்று முதல் ஆளாக குரல் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் தம்பிதுரை பன்னீா் செல்வத்தின் மீது உள்ள கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

சசிகலா,   தை முதல்வாரத்தில் முதல்வராக பதவி ஏற்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அந்த பதவி நிலைக்கும் என்று அவா் குடும்ப ஜோதிட கூறியுள்ளாராம்.

இதனால்தான் தற்போது முதல்வா் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் என்று குரல் எழுப்ப தொடங்கி உள்ளனா்.

பன்னீர்செல்வத்தை பொறுத்த வரை அவரை யாரும் எதுவும் சர்ச்சைக்குள்ளாக்காமல் இருந்தால் போதும். அவரே விலகிக்கொள்ளும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

எது எப்படியோ.. தம்பிதுரை தனது ஆசையை தீா்த்து கொண்டதாகவே அதிகவினா் கூறிவருகின்றனா்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்