சசிகலாவின் முதல் அபேஸ் 4000 கோடி….!? நாங்கல்லாம் அப்பவே அப்படி…!?

admin

Editorial Team

991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலம் அது.
தனது வளர்ப்பு மகன் திருமணத்திற்காக பாலு ஜுவல்லரியில் இருந்து  சசிகலாவின்  கில்லாடித் தனத்தால்… 40 கோடி ரூபாய்க்கு தங்கம் கடனாக  வாங்கப்பட்டது.
பணம்  தருகிறேன்  முதலில் நாங்கள் கேட்கும்  நகைகளை தாருங்கள் என்று கூறி அக்கடையின் நிறுவனர் பாலுவை தனது வீட்டுக்கே வரவழைத்து, அக்கடையின் ஒட்டுமொத்த  நகைகளையும் போயஸ்  தோட்டத்திற்கு எடுத்து வர செய்தனர்..!


அனைத்து நகைகளையும் பார்த்துவிட்டு   கடையில் இருந்த முக்கால்வாசி நகைகளையும் தங்களுக்கு தேவையானதுதான் என தேர்வு செய்து  எடுத்துக் கொண்டார் சசிகலா.


அதற்கான பணம் இதோ அனுப்புகிறேன். அதோ அனுப்புகிறேன்,  நாளை அனுப்புகிறேன்  எனக் கூறி… ஒரு சல்லி பைசா கூட கொடுக்கப் படாமல்  சசிகலாவால் நாயாக அலைக்கழிக்கப் பட்டார்  அந்த பாலு செட்டியார்.
அன்றைய காலத்தில்….சர்வாதிகார ஆட்சியில் இருந்த முதல்வரையோ, அவரது தோழியையோ…தட்டி கேட்கவோ பாலுவுக்காக  ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவோ முன்வரவில்லை.


அதை தனக்கு  சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சசி வாங்கிய நகைகளுக்கு பணம்  கொடுக்க மனமில்லாமல்  பாலுவை மொத்தமாக மொட்டையடித்தனர்..!
அதனால் பாலு தனது கடன் காரர்களுக்கு பணத்தை செலுத்த முடியாமலும்.,சரக்கு வாங்கிப் போட்டு    வியாபாரத்தை தொடர  முடியாமலும் தடுமாறினார்.
அன்றைக்கு 40 கோடி என்பது இன்றைய மதிப்பில் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க இரண்டு விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.


தங்கத்தின் அதீத விலை ஏற்றம். இன்றைய பண வீக்கம். இதன்படி பார்த்தால், அன்று 40 கோடி ரூபாய் தங்கம் என்பது….இன்று 4,000 கோடிக்குச் சமம்.
பணத்தைக் கேட்டுப் பார்த்த பாலு ஜுவல்லரி உரிமையாளர் சசிகலாவின்  அடியாட்களால் கடுமையாக மிரட்டப்பட்டார்.
 தனது கடையை தொடர்ந்து நடத்த முடியாமலும், தனது  கடன் கார்ர்களுக்கு பணத்தை கொடுக்க  பதில்  சொல்ல முடியாத நிலையிலும்  வேறு வழியின்றி…பாலு செட்டியார்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார்..என்று கூறப்பட்டு வருகின்றது.


இந்த கதை தமிழகத்தில் அந்த கால கட்டத்தில் எல்லோரும் அறிந்ததே என்றும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்டவரா அதிமுகவின் பொது செயலாளா் ?  வருங்கால தமிழகத்தின் முதல்வா்  என்று அன்றைய கால கட்த்தில் இருந்த தொண்டர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்