பிச்சை எடுத்த M.G.R..ன் கதாநாயகி…! வாழ்க்கை கொடுத்து காப்பாற்றிய அம்மா ஜெ

admin

Editorial Team

திரையுலகில் 1960 மற்றும் 70களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஞ்சனா. தெலுங்கு,மலையாளம்,  கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார்.  ஜெ.,வும் இதே கால கட்டத்தில் புகழ் பெற்ற கதாநாயகி. இருவரும் தோழிகள்.

சிவாஜியுடன் சிவந்த மண்  படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என அவர் பாடி ஆடியது ரசிகர்களை ஈர்த்தது. “சாந்தி நிலையம்”, “நான் ஏன் பிறந்தேன்”, “அதே கண்கள்”, “காதலிக்க நேரமில்லை” என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வசீகர அழகால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய காஞ்சனாவின் இன்னொரு புற வாழ்க்கை சோகம் நிறைந்தது.

அவர் நடித்து சம்பாதித்த சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி பிடுங்கி விட்டனர். எல்லாவற்றையும் இழந்து வறுமைப் பிடியில் சிக்கினார்.

கர்நாடகாவில் ஒரு கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தன.

இந்த விஷயம் அப்போதைய  முதல்வர்  ஜெ., விற்கு தெரிய வந்தது துடித்துப் போனார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து தனது தோழி காஞ்சனாவை அழைத்து வரச் சொன்னார்.

அதிகாரிகள் பெங்களூரு விரைந்து காஞ்சனாவை அழைத்து வந்தனர்..! அதன் பின் காஞ்சனாவின் வாழ்க்கையில் ஒளி பிறந்தது..!

இப்போது அவர்கள் நல்ல நிலையில் வசதியோடு வாழ்கிறார்கள்..!

அம்மா என்றால் சும்மாவா..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்