பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினமா செய்யவேண்டும்..! அ.தி.மு.க.,செயலாளர் அதிரடியால் பரபரப்பு..!

admin

Editorial Team

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் அன்று அவசர அவசரமாக மூத்த அமைச்சரும் முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வத்தை முதல்வராக அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர்.

இதுவரை இருந்த முதல்வர்களை விட சுறுசுறுப்பாக தெருவில் இறங்கி மக்களிடம் குறைகளை கேட்டு மற்ற மாநில முதல்வர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் பன்னீர்செல்வம்.

இந்நிலையில், கர்நாடகா மாநில அ.தி.மு.க., செயலாளர் புகழேந்தி கூறியதாக, தினகரன் வெப்சைட்டில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

அதில் முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக வேண்டும் என்றும் தமிழக முதல்வராகவும் அ.தி.மு.க.,பொதுச்செயலாளராகவும்,

சின்னஅம்மா சசிகலா பதவியேற்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியால் அ.தி.மு.க.,வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்