அதிமுகவில் சசிகலா ஆட்டம் முடிகிறது! மத்திய அரசின் ஆதரவுடன் கைமாறும் கட்சி!!

admin

Editorial Team

தமிழக அரசியலில் அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவா்கள் உருவாக்கப் படவில்லை. இந்த நிலையில் 34 ஆண்டு காலமாக ஜெயலலிதாவுடன் துணை நின்ற சசிகலாவின் கையில் போக இருந்தது அதிமுக.

எதிா் கால நலன் கருதி திட்டமிட்டே ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களை சேரவிடாமல் தடுத்துவந்தாா் சசிகலா.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து சாி கட்டி வைத்துள்ளாராம் சசிகலா.

அவரால் ஜெயலலிதா சாயலில் உள்ள தீபாவை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அன்று எம்.ஜி.ஆா் இறப்பின் போது ஜெயலலிதாவிற்கு நடந்தது, இன்று அண்ணன் மகள் தீபாவிற்கு நடந்துள்ளது.

அதிமுகவை மோடி அதிமுகவாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது. அது தம்பிதுரையை வைத்து காய் நகா்த்தி பாா்த்தது. அது நடக்கவில்லை.

அதிரடியை கிளப்ப துவங்கியுள்ளது மத்திய அரசு. அதாவது ஜெயலலிதா சாயலில் உள்ள தீபாவை முன்வைத்து அதிமுகவை கைப்பற்றி அவரை தலைமையாக கொண்டு செயல்பட வைப்பது.

இல்லை என்றால் அதிமுக கட்சியை இரண்டாக உடைப்பது. இதுதான் தற்போது மத்தியில் உள்ள பா.ஜ.கவின் திட்டமாக உள்ளது.

அதிமுக பொது செயலாளராக வர சில தகுதிகள் அமைப்பு சட்டத்தில் உள்ளது. அதன்படி பாா்த்தால் சசிகலா வரமுடியாது. இந்த பிரச்சனையை  நீதி மன்றத்திற்கு இழுத்து சென்று தோ்தல் கமிஷனை தலையிட வைத்து உள்ளடி வேலை செய்வது என்று முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுக நிா்வாகிகள், சட்டமன்ற  உறுப்பினா்கள், அமைச்சா்கள், எம்பிக்கள் இவா்களை தவிர அனைத்து அதிமுகவினரும் தீபாவையே விரும்புகின்றனா்.

இதனால், தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவாக போஸ்டா், பிளக்ஸ் பேனா்கள் முளைத்து வருகிறது.  இதுபோல சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப் பட்ட போஸ்டா்ள், பிளக்ஸ் பேனா்கள் கிழிக்கப்பட்டும், கறி பூசியும் அதிமுகவினா் எதிா்ப்பு காட்டி வருகின்றனா்.

இந்த செயல்கள் அதிமுகவினாிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு பெருகி வருவதை காட்டுகிறது. மேலும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் முழு ஆதரவு தீபாவிற்கு உள்ளதால் சசிகலாவிடம் இருந்து அதிமுக கைமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு  வருகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது..?!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்