அனைத்து சொத்துக்களையும் 16 வருடங்களுக்கு முன்பே ரத்த உறவுகளுக்கு உயில் எழுதிவிட்டார் ஜெ! எல்லாம் போச

admin

Editorial Team

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கும் சொந்தம் என்ற விவகாரம் பற்றி பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களில் முக்கியமானவை சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லம். கொடநாடு எஸ்டேட். ஹைதராபாத் திராட்சை தோட்டம்.

இவை அனைத்தும் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்டிற்கு கீழ் உள்ளதாம். இதன் அலுவலகம் ஐதராபாத் பஷிராபாத் ஜெ.ஜெ.கார்டன் என்ற முகரில் இருந்ததாம். சசிகலா குடும்பத்தினர் இதன் நிர்வாகிகளாக இருந்த நிலையில், அவர்களின் நடவடிக்கையில் தொடர்ந்து எழுந்த சந்தேகங்கள் காரணமாக அந்த டிரஸ்ட்டின் நிர்வாகிகளை அதிரடியாக வெளியேற்றினாராம் ஜெயலலிதா.

இதற்காக கடந்த 2000 ஆம் ஆண்டில் அவரே நேரடியாக ஐதராபாத் சென்று  ரிஜிஸ்ரேசன் அலுவலரை அழைத்து, தனது ரத்த உறவினர்கள் அடங்கிய பிரைவேட் கமிட்டியை அமைத்தாராம். அவர்கள் யார் என்ற விபரங்களை பதிவாளர் அலுவலகம் வெளியிட மறுப்பதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ராஜசேகர ரெட்டி நடத்தும் சாக்ஷி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்