டியூசன் சென்டரில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்: 3 காம கொடூரர்கள் கைது

admin

Editorial Team

 ர்மபுரியில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலருக்கு மயக்க மருந்து கொடுத்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக டியூசன் சென்டர் நடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (26), மற்றொரு சிவக்குமார் (27).

நண்பர்களான இவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலக்கோடு மற்றும் தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார்கள்.

இங்கு 10 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் சுற்றுவட்டார பகுதிகளை 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு மாணவிகளே அதிக அளவில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலரை மயக்க மருந்து கொடுத்து சிவக்குமார் உள்பட சிலர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் டியூசன் சென்டருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் வெளியான தகவல் போலீசாரையே கதி கலங்க வைத்தது. அதன் விவரம் வருமாறு:-

டியூசன் சென்டர் நடத்திய சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்களும் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளனர். சரியான வேலை எதுவும் கிடைக்காததால் 3 பேரும் சேர்ந்து அங்கு டியூசன் சென்டர் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பாலக்கோடு, தர்மபுரி பகுதியில் டியூசன் சென்டரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தொடங்கினர்.

அந்த டியூசன் சென்டரில் பாலக்கோடு மற்றும் தர்மபுரி பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டியூசன் படிக்க சேர்ந்தனர். குறுகிய நாளிலேயே அதிக அளவில் மாணவ - மாணவிகள் சேர்ந்ததால் 3 பேரும் 2 சென்டர்களிலும் மாறி மாறி பாடம் நடத்தினர்.

டியூசன் சென்டர் தொடங்கிய சில மாதங்களிலேயே சிவக்குமார் தனது காம சேட்டைகளை தொடங்கி உள்ளார். அப்போது அழகாக இருக்கும் மாணவிகளுக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நடித்து அவர்களிடம் சிரித்து சிரித்து பழகினார்.

அந்த மாணவிகளை தனியாக டியூசனுக்கு வரவழைத்த சிவக்குமார் அவர்களுடன் நெருங்கி பழகினார். அப்போது தனது காம இச்சைக்கு பயன்படுத்த முடிவு செய்த அவர் பாசத்தோடு அவர்களுக்கு வழங்குவது போல டீ மற்றும் குளிர்பானங்களை அடிக்கடி வாங்கி கொடுத்தார்.

இதில் சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அதனை செல்போன்களில் வீடியோவாக சிவக்குமார் எடுத்தார்.

மாணவிகள் மயக்கம் தெளிந்ததும் அவர்களிடம் நைசாக பேசி வீட்டிற்கு அனுப்பி வைப்பார். பின்னர் சமயம் கிடைக்கும் போது சிவக்குமார் அந்த மாணவிகளை தனியாக அழைத்து தான் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது தொடர்பான அந்த விடியோவை காட்டுவார்.

அதனை பார்த்து அதிர்ச்சி அடையும் மாணவிகளின் அடுத்த கட்ட செயல்பாட்டை கண்காணிப்பார். இந்த ஆபாச வீடியோவை வெளிவிடாமல் இருக்க வேண்டுமானால் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டுவார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் மாணவிகளை தன்னுடைய காம இச்சைக்கு சிவக்குமார் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அதனையும் வீடியோவாக படம் பிடித்து தனது நண்பர்களான ஈஸ்வரன் மற்றும் மற்றொரு சிவக்குமாருக்கும் அதனை காட்டியுள்ளார்.

அவர்கள் 2 பேரும் அந்த ஆபாச வீடியோவை மாணவிகளுடன் காட்டி மிரட்டி மாறி, மாறி உல்லாசமாக இருந்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வெளியில் சொல்ல பயந்து அப்படியே அவர்களின் காம இச்சைக்கு இசைந்துள்ளனர். இப்படியாக இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் என்ற போர்வையில் அவர்கள் சீரழித்துள்ளனர்.

இந்த கொடுர சம்பவம் கடந்த 2 வருடங்களுக்கும் மேல் சத்தம் இல்லாமல் அந்த டியூசன் சென்டரில் அரங்கேறியது தான் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் அங்கு டியூசன் படித்த மாணவிகள் பெற்றோர் தற்போது பரிதவிப்பில் உள்ளனர்.

இதற்கிடையே டியூசனில் படித்த ஒரு மாணவி தனது பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையிலே இந்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த காம லீலையில் சிவக்குமார் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஈஸ்வரன் மற்றொரு சிவக்குமாரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: மாலைமலர்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்