இதுதான் நம்பிக்கைக்கு உரிய தகவல்: அப்பல்லோ விரைந்த சீமான்

admin

Editorial Team

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 15 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை அவரது உடல்நலம் குறித்த தெளிவான விளக்கம் மக்களுக்கு அளிக்கப்படவில்லை. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது முதல்வர் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

முதல்வரின் உடல்நலம் குறித்து அறிய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பினர்.

இந்நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசியதாக கூறிய சீமான், முதல்வர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், முதல்வரின் உடல்நலத்தில் தொடர்ச்சியாக நல்ல முன்னேற்றம் உள்ளதாக அமைச்சர்கள் கூறினர்.

இதுதான் நம்பிக்கைக்கு உரிய தகவல் மற்றும் அதிகாரப்பூர்வமானது. எனவே முதல்வரின் உடல்நலம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்