ஜெயலலிதாவை காதலித்தேன்! முன்னாள் நீதிபதியின் சர்ச்சை பதிவு

admin

Editorial Team

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அதிமுக-வினர் உட்பட மக்களும் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் நீதிபதி Markandey Katju சர்ச்சையான கருத்துகளை கூறியுள்ளார்.

அவருடைய பதிவில், ஜெயலலிதா சிங்கம் போன்ற ஒரு பெண். அவரை எதிர்ப்பவர்கள் குரங்குகள், அவர் விரைவில் குணம்பெற்று பணிக்கு திரும்புவார்.

நான் இளைஞனாக இருந்த போது, ஜெயலலிதா மிகவும் இளமையாக இருப்பார் அவரது கவர்ந்திழுக்கும் அழகால் அவரை நான் காதலித்தேன்.

ஆனால் அது ஜெயலலிதாவுக்கு தெரியாது. என்னுடைய காதல் என்றுமே மாறாதது.

இப்பொழுதும் அவரது கவரும் அழகை பார்க்க முடிகிறது, இப்பொழுதும் அவரை நான் காதலிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என கூறியிருந்தார்.

இதனால் சர்ச்சை எழவே தன்னுடைய பதிவு நீக்கியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்