ஒரு நகரே முற்றிலுமாக அழிந்தது! 339 பேர் பலி- அவசரநிலைப் பிரகடனம்

admin

Editorial Team

அமெரிக்கா, ஹைட்டி, கியூபாவை தாக்கிய வீசிய மாத்யூ புயலுக்கு இதுவரையிலும் 339 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரீபியன் கடல் பகுதியில் புயல் ஒன்று மையம் கொண்டிருந்தது.

மாத்யூ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று முன்தினம் ஹைட்டி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது.

230 கி.மீ வேகத்துக்கு பயங்கர காற்று வீசியதால் கடும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன

இந்நிலையில் அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.

இதனால் பலத்த மழை கொட்டியதுடன் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதுவரையிலும் 339 பேர் பலியாகி உள்ளனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹைட்டி நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து புளோரிடாவில் ஜனாதிபதி ஒபாமா அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ஹைட்டியை முற்றிலுமாக சேதப்படுத்திய புயல்- 140 பேர் பலி

ஹைட்டியை தாக்கிய மாத்யூ புயலால் இதுவரையிலும் 140 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரீபியன் கடல் பகுதியில் புயல் ஒன்று மையம் கொண்டிருந்தது.

மாத்யூ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று முன்தினம் ஹைட்டியை தாக்கியது.

230 கி.மீ வேகத்துக்கு பயங்கர காற்று வீசியதால் கடும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதுவரையிலும் 140 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் தென்பகுதியில் இருக்கும் ரோஷ்-அ-பெடூ நகரில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தென் கடலோர பகுதி முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக ஒரு நகரே ஒட்டுமொத்தமாக அழிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்