முதல்வர் உடல்நலம் குறித்து சசிகலா புஷ்பா புதிய அதிர்ச்சி தகவல்

admin

Editorial Team

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் சதி நடந்துள்ளதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் சற்று முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவர் பேசியபோது, ’அனைத்துக் கட்சி தலைவர்களும் மருத்துவமனையில் உள்ள முதல்வரை வெளியில் இருந்து தான் பார்க்கிறார்கள்

முதல்வருக்கு இயற்கையாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டதா?

ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறைக்கு சென்று அவரை பார்க்க அனுமதி மறுப்பது ஏன்?

முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் சதி நடந்திருக்கிறது என்பது தான் உண்மை.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை யார் வெளியிட்டது?

ஜெயலலிதாவுக்கு பின்னால் இருப்பவர்கள் தன்னை அரசியலில் இருந்து நீக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்று வரும் சதியை அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும் எனக் கூறிய சசிகலா புஷ்பா தான் தற்போது வரை அதிமுக எம்.பியாக நீடிக்கிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் உடல்நிலை பாதிப்பு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சசிகலா புஷ்பா கோரிக்கை விடுத்துள்ளார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்