ஜெ. உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்பல்லோ மருத்துவமனை

admin

Editorial Team

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள

முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று 11-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே மேற்பார்வையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு வரை பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இன்று தமிழக அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று இரவு அப்பல்லோ நிர்வாகம், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
 அதில் கூறப்படுள்ளதாவது: அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் Guy's and St.

Thomas மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்வதேச சிறப்பு மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் இருந்து அப்பல்லோ மருத்துவமனை ஆலோசனைகளைப் பெற்று வருகிறது.

டாக்டர் ரிச்சர்ட் பீலே முதல்வரின் உடல்நிலையை ஆராய்ந்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவரது மருத்துவ அறிக்கைகளையும் ரிச்சர்ட் பீலே ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவர்களுடன் ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை குறித்து அவர் விவாதித்தார்.

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்தொற்றை குணப்படுத்த இப்போது ஆண்ட்டிபயாட்டிக்குகளுடன் கூடிய சிகிச்சை முறையை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்